பருவதமலை கிரிவலம் - "மார்கழி மாதத்தின் புனித பயணம்"

கிரிவலத்தின் சிறப்பு:

தமிழ் மாதம் மார்கழி-1 அன்று பர்வத மலைக்கு கிரிவலம் சுற்றவும் பருவதமலை ஏறுவதற்கும் ஒரு அருமையான நாளாகும். இந்த நாள் மார்கழி மாதம் ஆனது மிகவும் சிறப்பாக பருவதமலை கிரிவலமானது நடைபெறுகிறது. நீங்கள் பருவதமலை என எந்த இடத்தில் தொடங்குகிறீர்களோ அந்த இடத்திலேயே மறுபடியும் வந்து முடிப்பது தான் இந்த பயணம். இது ஒரு புனிதமான நாளாகும் மொத்தமாக பருவதமலையின் கிரிவலப் பாதையில் நீளமானது 26 கிலோமீட்டர் ஆகும். இதனை நாம் வெறும் கால்களால் சுற்றிவர வேண்டும்.

இந்த பயணமானது உங்களுக்கு மிகவும் சிறப்பானதாக அமையும்.பருவத மலையை கிரிவலம் பொழுது சுற்றி உள்ள கோயில்கள் மற்றும் சில பகுதிகளில் உங்களுக்கு தேவையான நீர்,அன்னதானம் மற்றும் சில உணவுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. நீங்கள் இந்த மலையினை சுற்றும் பொழுது காடுகளின் ஓரமாகவே சுற்றுகிறீர்கள் இதன் மூலமாக இயற்கை காற்று மற்றும் இயற்கையை ரசித்து நீங்கள் நிச்சயமாக ஒரு சுவாரஸ்யமான அனுபவம் பெற்று இருப்பீர்கள்.

எனவே மார்கழி அன்று நீங்கள் பருவத மலையினை நிச்சயமாக ஒரு தடவை கிரிவலம் செல்லுங்கள்.இது உங்களுக்கு மிகவும் சிறப்பான பயணமாக இருக்கும். கிரிவலம் செல்லும் வழியில் நிறைய கோவில்கள் இருக்கின்றது நீங்கள் அனைத்தையும் வழங்கிவிட்டு அங்கே கொடுக்கும் அன்னதானங்களே நீங்கள் பெற்றுக் கொண்டு இம்மலையை கிரிவலம் சுற்றி வரலாம்.

கோயில்கள் மற்றும் தரிசனங்கள்:

பச்சையம்மன் கோவில்: நீங்கள் பச்சையம்மன் கோவிலில் இருந்து கிரிவலம் தொடங்கும்போது பச்சையம்மன் கோவிலில் நீங்கள் தெய்வத்தை வணங்கி விட்டு அங்குள்ள அனைத்து சுவாமிகளையும் தரிசனம் செய்துவிட்டு நீங்கள் உங்களின் பயணத்தை தொடங்கலாம். பச்சையம்மன் கோயிலானது மிகவும் சிறப்பு வாய்ந்த கோயிலாகும். முதலில் நீங்கள் உங்கள் பயணத்தை ஆரம்பிக்கும் போது நன்றாக கடவுளை வணங்கி விட்டு ஆரம்பிக்கவும். 

நீங்கள் பச்சையம்மன் கோவிலில் இருந்து பயணத்தை தொடங்கும்போது நேராக நீங்கள் சென்றவுடன் உங்களுக்கு காஞ்சி செல்லும் மெயின் ரோடு அடைவீர்கள் அங்கிருந்து நேராக செல்ல வேண்டும். இந்த இடத்தில் மட்டும் உங்களுக்கு சிறிதளவு சிரமமாக இருக்கும் நீங்கள் மெயின் ரோடு நேராக சென்றவுடன் உங்களுக்கு போகும் வழியில் ஒரு சில கோயில்கள் மட்டுமே மெயின் ரோட்டில் இருக்கும் நீங்கள் அந்த சுவாமிகளை தரிசனம் செய்துவிட்டு நீங்கள் பிறகு கடலாடி என்ற கிராமத்தினை அடைவீர்கள். 

இதிலிருந்து பச்சையம்மன் கோவில் வரை காடையொட்டிய பயணமாகவே இருக்கும் எனவே நீங்கள் உங்களின் ஓய்வை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மறுபடியும் பயணத்தை தொடங்கலாம். நீங்கள் கடலாடி கிராமத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் போது நீங்கள் மிகவும் இயற்கையை ரசித்துக்கொண்டே செல்லலாம். கடலாடி கிராமத்தில் இருந்து நீங்கள் அதற்கிடையில் உள்ள கோவில்களில் தரிசனம் பெற்றுக் கொண்டு அடுத்ததாக நீங்கள் பட்டியந்தல் என்னும் கிராமத்தை அடைவீர்கள். 

இந்த கிராமத்தில் கட்டு கட்டும் இடம் ஆனது மிகவும் பிரபலமானது. நீங்கள் பட்டியந்திர கிராமத்தில் இருந்து அங்குள்ள சிவன் கோயில்கள் மற்றும் அம்மன் கோயில்கள் ஆகிய கோயில்களில் தரிசனம் பெற்றுக் கொண்டு நீங்கள் எங்களது பயணத்தை தொடரலாம். நீங்கள் பட் எந்த கிராமத்தை தாண்டியுடன் அடுத்த கட்டமாக கங்கணமலை கிராமத்தை நோக்கி உங்களது பயணத்தை தொடங்குகிறீர்கள் போகும் வழியில் நிறைய சிறிய சிறிய கோயில்கள் இருக்கும் அங்கு தரிசனம் பெற்றுக் கொண்டு போகும் வழியில் வடக்கு பார்த்த காளியம்மன் கோயில் என்னும் கோயில் இருக்கும்.

அந்த கோயிலிலும் தரிசனம் பெற்றுக் கொண்டு நீங்கள் தங்களது என்னும் கிராமத்தை அடைவீர்கள் அங்கிருந்து நீங்கள் உங்கள் பயணத்தினை மறுபடியும் தொடங்குவீர்கள். கங்கன மகாதேவிலிருந்து நேரடியாக நீங்கள் அடுத்து பச்சையம்மன் கோயிலை அடைவீர்கள். உங்களது பயணமானது இறுதியில் முடிவடைகிறது நீங்கள் கடைசியாக மழையை நோக்கி கையெடுத்து கும்பிட்டு விட்டு நீங்கள் உங்களுடைய இருப்பிடத்திற்கு செல்லலாம். நீங்கள் ஓய்வு பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் உங்களுக்கு மாதிமங்கலம் இன்னும் கிராமத்தில் வாடகைக்கு அறைகள் விடப்பட்டிருக்கும். அங்கு போய் நீங்கள் உங்களுக்கு தேவையான ஓய்வு பெற்றுக்கொண்டு நீங்கள் மறுநாள் உங்களுடைய சொந்த ஊருக்கு செல்லலாம். 

நீங்கள் இந்த பயணத்தை சுற்றிய அனுபவத்தினை உங்களுடைய உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் நீங்கள் இந்த மலையின் சிறப்பையும் உங்களுடைய அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் ஒரு தடவை இந்த மழையினை கிரிவலம் சுற்றி முடித்த பிறகு உங்களுக்கு ஒரு சிறந்த புத்துணர்ச்சி மற்றும் புதிய அனுபவம் கிடைக்கும். நீங்கள் மறுபடியும் இந்த மலையினை உங்களுடைய உறவினுடன் அடுத்த வருடமும் மார்கழி மாதம் என்று நீங்கள் கிரிவலம் சுற்ற வருவீர்கள் இந்த அனுபவம் உங்களுடைய வயதில் மிகவும் சிறப்பானதாக இருக்கும் எனவே அனைவரும் ஒரு முறையாவது பருவதமலை கிரிவலம் சூட்ட வேண்டும்.

மேலும் இந்த மலையை சுற்றி கடலாடி கிராமம், பட்டியந்தல் கிராமம், மேலும் பல்வேறு வகையான கிராமங்கள் இருக்கின்றன. 

சிவன் கோயில்கள், அம்மன் கோயில்கள், காளியம்மன் கோயில்கள் என பல்வேறு வகையான கோயில்கள் பருவதமலையை சுற்றி இருக்கின்றன. 

பெரும்பாலான கோயில்களில் அன்னதானம் சுவாமி தரிசனம் மற்றும் நீர் வசதி போன்ற பல்வேறு வகையான வசதிகள் இருக்கின்றன. 

பயண வழிகாட்டி: 

  • முதலில் நீங்கள் பர்வத மலைக்கு வந்து அடைந்தவுடன் மாரி மங்கலம் இறங்கி அங்கிருந்து பச்சையம்மன் கோயிலுக்கு வந்தடைய வேண்டும். 
  • பச்சையம்மன் கோயிலில் இருந்து உங்களுடைய பயணத்தை தொடங்கலாம். 
  • பச்சையம்மன் கோயில் - மெயின் ரோடு 
  • மெயின் ரோடு நேராக சென்றாள்-கடலாடி கிராமம் 
  • கடலாடி கிராமம்-பட்டியந்தல் கிராமம் 
  • பட்டியந்தல் கிராமம்- கெங்கள மகாதேவி கிராமம் 
  • கெங்கள மகாதேவி கிராமம் -பச்சையம்மன் கோவில் 

ஓய்வுக்கான இடம்: 

நீங்கள் பருவதமலை கிரிவலப் பயணத்தை முடித்தவுடன் நீங்கள் மிகவும் தொலைவில் இருந்து வந்திருந்தால் மாதிமங்கலம் பகுதியில் அதிக அளவு வாடகை அறைகள் இருக்கின்றன. போதுமான அளவு நீங்கள் ஓய்வு எடுத்துக் கண்டு உங்களுடைய சொந்த ஊருக்கு பிறகு செல்லலாம். 

அனுபவம்: 

பருவதமலை சுற்றி கிரிவலம் மேற்கொள்ளும் போது பெரும்பாலும் நீங்கள் காடுகளின் ஓரமாகவே செல்வீர்கள் இந்த அனுபவம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். 

இயற்கை காற்றை சுவாசித்துக் கொண்டு பருவதமலை சுற்றி மிகவும் அற்புதமாக இருக்கும். 

மேலும் மன அமைதி மற்றும் புத்துணர்ச்சி போன்றவைகள் உங்களுக்கு ஏற்படும்.

பருவதமலை கிரிவலம் என்பது ஒரு ஆன்மீகப் பயணம் மட்டுமல்ல. மேலும் இயற்கையின் மடியில் மன அமைதியை தேடும் ஒரு புனித பயணமாக இந்த பயணம் இருக்கும். உங்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய ஒளி பிறக்க பறக்க, பருவதமலை சென்று ஒரு முறையாவது கிரிவலம் செய்யுங்கள்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url